Welcome to UK INFOS
(Abacus, Hindi and Vedic Maths Coaching Centre)
அன்பு மாணவர்களே,
உலக அளவில் நடைபெறக்கூடிய அபாகஸ் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்றார்போல் இதில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
Bud Level - மாணவருக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வினா மற்றும் விடைகள்.
இதில் மொத்தம் 30 கேள்விகள் உள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் தலா ஒரு மதிப்பெண்.
இதற்கு நீங்கள் மூன்று நிமிடத்தில் விடை அளிக்க முயற்சிக்கவும்.
அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை அளித்து இருந்தால் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஒருவேளை நீங்கள் சில கேள்விகளுக்கு தவறாக விடை அளித்திருந்தால் மறுபடி-மறுபடி முழு மதிப்பெண் பெறும் வரை முயற்சித்துப் பயிற்சியை மேற்கொள்ளவும்.
"முயற்சியை திருவினையாக்கி வெற்றியை உனதாக்கவும்."
நேரு மாமாவின் பிறந்தநாளான குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 2021) உலக அளவில் நடைபெறவிருக்கும் அபாகஸ் போட்டித் தேர்வில் பங்கேற்கவிருக்கும் அனைத்து மாணவச் செல்வங்களும் கோப்பையை பெற்று வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாய்ப்பு வரும் வரை காத்திராமல் வாய்ப்பை நாமே உருவாக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை வாய்ப்பை உருவாக்க தெரியவில்லை என்றால் வரும் வாய்ப்பை விட்டு விடாமல் கெட்டியாக பிடித்து முன்னேறி விடவும்.
மாணவர்களே! உங்களின் திறமையை வெளிக்கொணர இதுவே சரியான தருணம்.
உங்களின் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும் உங்களின் பெற்றோர்களுக்கும், உங்களின் ஆசிரியருக்கும் உங்களின் கோப்பையே பதில் சொல்லும்.
பிள்ளைகளின் மகிழ்ச்சியில் நிம்மதியைத் தேடும் பெற்றோர்களுக்கு உங்களது கோப்பையை சமர்ப்பியுங்கள்.
என்ன மாணவர்களே?!
போட்டியில் வெல்ல போகிறீர்களா?
வாருங்கள் பார்க்கலாம்.
0 Comments