Welcome to UK INFOS
(Abacus, Hindi & Vedic Maths Coaching Centre)
Batch 9 Results - 2022
பெரிய ஆள், சின்ன ஆள்
பீட்ஸா படுத்திய பாடு!
மார்கன் ஸ்புர்லாக் என்பவர் திரைப்பட இயக்குநர். சாதாரண நபர்தான். அவருக்குத் திடீரென்று ஓர் ஆசை. வெறி என்று கூடச் சொல்லாம். சூட்டோடு சூடாக ஒரு சபதத்தையும் எடுத்துவிட்டார். ‘மெக்டானல்டை உண்டு இல்லை என்று செய்துவிட்டுத்தான் தூங்குவேன்.’ மெக்டானல்ட் என்பது அமெரிக்காவில்
இருக்கும் மிகப்பெரிய ஃபாஸ்ட் ஃபுட் செயின் நிறுவனம். ஊருக்கு ஊர் ஒரு கடையாவது இருக்கும். சாப்பிட பர்கர், உருளைக்கிழங்கு சிப்ஸ், குடிக்க கோலா என்று துரித உணவு இங்கு கிடைக்கும். நீங்கள் ஆர்டர் செய்தால் அடுத்த பத்து நிமிஷத்துக்குள் உணவு ரெடி! விலையும் மிக மலிவு.
சரி, மார்கன் இந்தச் சபதத்தை ஏன் எடுத்தார் என்பதைப் பின்னால் பார்ப்போம். அடுத்து அவர் என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்.
தெருக்கோடியில் நின்று மைக் பிடித்து கத்தினார்.
‘எல்லாரும் வாங்க, எல்லாரும் வாங்க!’ எல்லோரும் வந்தனர். ‘உங்களுக்கு மெக்டானல்ட் தெரியும் இல்லை?
‘தெரியாம இருக்குமா? அடிக்கடி அவங்க கடைல நிறைய வாங்கிச் சாப்பிடுவேனே.’
‘கரெக்ட். இனி நான் தினமும் மூணு வேளை மெக்டானல்ட் மட்டும்தான் சாப்பிடப்போறேன். காலை, மாலை, இரவு – மூன்று மெக்டானல்ட்தான். நோ காபி, நோ டீ, நோ ஜூஸ்.. மெக்டானல்ட்.’
‘ஏன்? உங்களுக்கு மெக்டானல்ட் அவ்வளவு பிடிக்குமா?
‘இல்லையா பின்னே? ரொம்ப நல்ல கம்பெனி ஆச்சே! விதவிதமா எவ்வளவோ ஐட்டம்ஸ் செய்யறாங்க! அவங்க மெனு கார்டை வாங்கி வச்சிக்கிட்டு எல்லாத்திலயும் ஒவ்வொண்ணு தினமும் சாப்பிடப்போறேன். நாளையில் இருந்து.’
எதற்காக இவர் இப்படி கிறுக்குத்தனமாகச் செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மார்கனை ஆர்வமாகக் கவனிக்கத் தொடங்கினார்கள்.
அன்று மாலையே ஒரு மருத்துவரைச் சென்று பார்த்தார் மார்கன். தன்னை ஒரு முறை முழுமையாகப் பரிசோதித்துக் கொண்டார்.
மறுநாள்.
சொன்னதைப் போலவே ஒவ்வொரு மெக்டானல்ட் வகையாக செய்து சாப்பிடத் தொடங்கினார்.
அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
ஒரு மாதம் கழிந்தது. மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்தார். பத்திரிகையாளர்களை, பொதுமக்களை, நண்பர்களை ஒன்று கூட்டினார். ‘இதோ நான் திரும்ப வந்துட்டேன்.’ ‘சரி, இப்ப அதுக்கு என்ன?’
‘இதோ ஒரு மாசத்துக்கு முன்னாடி எடுத்த என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்.’ |
வாங்கிப் பார்த்தனர்.
‘’உங்க எடை, கொலஸ்டிரால் எல்லாமே நார்மலா இருக்கு. பரிபூரண சுகம்னு போட்டிருக்கு.’
‘ம். போட்டிருக்கா? அடுத்த நாள் தொடங்கி நான் மெக்டானல்ட் ஐட்டம்ஸை மட்டும்தான் ஒரு மாசத்துக்குத் தொடர்ந்து சாப்பிட்டேன். அது உங்க எல்லாருக்கும் தெரியும்.’ ‘ம்... தெரியும்!’
மார்கன் புன்னகை செய்தார். ‘இதோ இன்னிக்குக் கிடைச்ச என்னோட புது மெடிக்கல் ரிப்போர்ட்.’
கூட்டத்திலிருந்து ஒருவர் வாங்கிக்கொண்டார். ‘இப்ப இரண்டு ரிப்போர்ட்டையும் ஒப்பிட்டுப் பாருங்க’ என்றார் மார்கன். ஒப்பிட்டுப் பார்த்த அவர் புருவங்களை உயர்த்தினார்.
‘என்ன மார்கன் ! உங்க எடை இருபது கிலோ கூடியிருக்கு. கொலஸ்டிரால் வேற 168-ல இருந்து 230-க்கு மாறியிருக்கு?’
மார்கன் சிரித்தார். பிறகு கூட்டத்தைப் பார்த்துக் கூறினார். ‘இதோட சேர்த்து நான் மட்டும் மதுவும் குடிக்கறவனா இருந்திருந்தா என்னோட கல்லீரல் முழுக்க முழுக்கக் கெட்டுப் போயிருக்கும்.’ கூட்டம் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தது.
அனைவரையும் நோட்டம் விட்டபடி தீர்க்கமான குரலில் கூறினார் மார்கன். ‘எல்லாத்துக்கும் காரணம் மெக்டானல்ட், ஃபாஸ்ட் ஃபுட்.’
‘மெக்டானல்ட் பதார்த்தங்கள் உடல் நலனுக்குத் தீங்கானவை. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் அமெரிக்காவைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. எப்படிச் சீரழிக்கிறது என்பதற்கு நானே ஒரு நடமாடும் அத்தாட்சி.’
தன்னையே ஒரு குப்பைத் தொட்டியாக மாற்றிக்கொண்டு மெக்டானல்டுக்கு எதிராக முதல் போர்க்கொடி உயர்த்தினார் மார்கன்.
இத்தோடு விட்டாரா?
தனது ஒரு மாத அனுபவங்களை ஆதாரமாக வைத்து ஒரு டாக்குமெண்டரி படத்தையும் எடுத்தார். படத்தின் பெயர் ”Super Size Me.”
சரி, மெக்டானல்ட் என்ன செய்து கொண்டிருந்தது?
ஆரம்பம் முதலே மார்கனை அவர்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் அவரை ஒரு பொருட்டாக அவர்கள் மதிக்கவில்லை. அத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஒற்றை ஆள் என்ன செய்துவிட முடியும் என்றே நினைத்தனர்.
ஆனால் மார்கன் தம்மை எதிர்த்து ஒரு முழு நீளப் படமே எடுத்துவிட்டார் என்று தெரிந்ததும் மெக்டானல்ட் முதல் முறையாக விழித்துக்கொண்டது.
Super Size Me படத்தை மார்கன் வெளியிடாமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்தது. பாச்சா பலிக்கவில்லை.
2004-ல் நடைபெற்ற சண்டேன்ஸ் (Sundance) திரைப்பட விழாவுக்குத் தனது படத்தை அனுப்பி வைத்தார் மார்கன். சரி ஒழிந்து போகட்டும், இந்தப் படத்தை எல்லாம் யார் உட்கார்ந்து பார்க்கப் போகிறார்கள் என்று மறுபடியும் அலட்சியப்படுத்தியது மெக்டானல்ட்.
மறுபடியும் சறுக்கல்.
படம் பிய்த்துக்கொண்டு ஓடியது. இது வரை ஃபாஸ்ட் ஃபுட் பற்றி இத்தனை அற்புதமாக யாரும் படம் எடுத்ததில்லை என்று பார்த்தவர்கள் வியந்தனர்.
அமெரிக்க வரலாற்றின் ஐந்து முக்கிய டாக்குமெண்ட்ரி படங்களில் ஒன்றாக Super Size Me மாறிப்போனது.
இனி யாரும் மெக்டானல்டைக் கொறிக்கக்கூடாது என்று பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தடை விதித்தனர். முதல் பெரிய அடி. குழந்தைகள் மார்க்கெட் டவுன். ‘ஐயய்யோ கொலஸ்ட்ரால் வந்தால் உடம்பு ஊதிடும்’ என்று இளைஞர்களும் இளைஞிகளும் மெக்டானல்டைக் கைகழுவினர். இரண்டாவது பெரிய அடி.
இளசுகள் மார்க்கெட் டவுன். திணறிப்போனது மெக்டானல்ட்.
அமெரிக்கா மட்டுமின்றி, பிற உலக நாடுகளிலிருந்தும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின.
ஏராளமான கனவுகளுடன், ஏராளமான திட்டங்களுடன் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருந்த மெக்டானல்ட் அப்படியே ஸ்தம்பித்து நின்றது.
இப்படி ஓர் எதிர்ப்பைத் தன் வாழ்நாளில் மெக்டானல்ட் சந்தித்தது கிடையாது.
விற்பனை சுத்தமாகப் படுத்துக்கொண்டது. பதினேழு வருடங்களாக மெக்டானல்டின் விற்பனையாளராக இருந்து வந்த பால் சாப்பல் குறைபட்டுக் கொண்டார்:
‘இன்றைய தேவைக்கு ஏற்றாற்போல் மெக்டானல்ட் மாற மறுக்கிறது.’
நிறுவனத்தின் முன்னாள் CEO ஜிம் காண்டலூபா நெற்றியைக் கீறிக்கொண்டார். ‘மெக்டானால்ட் மாற வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.’
மாற்றம்.
இந்த ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது மெக்டானல்ட்.
எதுவுமே புரியாதது போல் இருந்தது. ஏதோ புரிந்தது போலவும் இருந்தது.
குழம்பிக் குழம்பித் தவித்து, கடைசியில் ஓர் உருப்படியான காரியத்தைச் செய்தது மெக்டானல்ட். தனது முன்னாள் CEO ஜிம் காண்டலூபாவின் கைகளில் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஒப்படைத்தது. இது நடந்தது 2003ஆம் ஆண்டு.
மெக்டானல்ட் மாறிய கதை:
போர்க்கால அடிப்படையில் நிலைமையை ஆராய்ந்தார் ஜிம்.
காலம் காலமாக அமெரிக்கா விரும்பும் ஒரு பிராண்டாக இருந்த மெக்டானல்ட் திடீரென்று பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம்?
• மார்கன் சுட்டிக்காட்டியதைப் போல் அதீத கொழுப்பு மிக்க உணவு வகைகள். இதை மாற்றவேண்டும். தொடங்கப்பட்ட புதிதில் ஃபாஸ்ட் ஃபுட் ஐடியா அனைவரையும் கவர்ந்தது உண்மைதான். ஆனால் இப்போது ரசனை மாறிவிட்டது.
மெக்டானல்டை மாற்றவேண்டும். செய்ய வேண்டியது என்னென்ன என்று ஒரு பட்டியல் தயாரித்தார்.
* மெக்டொனல்டின் பெயர் ஏகத்துக்குக் கெட்டுக்கிடக்கிறது. அதை மாற்றவேண்டும்
* எல்லோருக்கும் மெக்டொனல்ட் பிடிக்கவேண்டும்.
மளமளவென்று வேலைகள் தொடங்கப்பட்டன. வரிசையாகப் பல மாற்றங்களைச் செய்தார். என்னென்ன மாற்றங்களைச் செய்தோம் என்பதை எல்லோருக்கும் முறைப்படி தெரியப்படுத்தினார்.
முதல் முறையாகக் காய்கறி, பழ வகைகளை (Fresh Salads) மெனு கார்டில் கொண்டு வந்தார். ‘ஐயா சாமி, நாங்க ஃபாஸ்ட் ஃபுட் மட்டும் செய்யலை. காய்கறி, பழங்கள் எல்லாமே விற்கிறோம். அதனால் தாராளமா எங்க கடைக்கு வரலாம், சாப்பிடலாம்.’
குறைந்த கொழுப்பு (low fat) உணவு வகைகளை அதிகரிக்கச் ( ‘அதிகக் கொழுப்பு சாப்பிட்டா உடம்பு பெருக்கும், நிறைய பி. / வரும்னு எங்களுக்கும் தெரியும். அதனாலே எங்க எல்லா உணவுவிலும் கொழுப்பைக் குறைச்சுட்டோம். குழந்தைங்க, பெரியவங்க எல்லாரும் தைரியமா எதை வேணாலும் சாப்பிடலாம்.’
“I’m lovin’ it’ என்னும் வாசகத்தை மெக்டொனல்ட் லோகோவுடன் இணைத்தார்.
‘அமெரிக்கர்கள் எல்லாரும் எங்க தயாரிப்பைத்தான் விரும்பிச் சாப்பிடறாங்க. அப்ப நீங்க?’
ஒரு பிரபல பாப் பாடகரை உடனடியாக வரவழைத்து மெக்டானல்ட் விளம்பரத்தில் நடிக்க வைத்தார். ‘பார்த்தீங்களா! இவர்கூட எங்க ஐட்டம்ஸ்தான் சாப்பிடறார்.’
வாடிக்கையாளர் சேவையை நவீனமாக்கினார். ‘நீங்க கடைக்குக்கூட வரவேணாம். ஒரு போன் பண்ணா போதும். நாங்களே கொண்டு வந்து உங்க வீட்ல கொடுத்துடுவோம்.’
பீட்ஸா பாடம்:
மெக்டானல்ட் ஒரு நிர்வாகவியல் பாடம். மேனேஜ்மெண்ட் படிக்கும் அனைவரும் இந்தக் கதையை உருப்போடுவார்கள். இதிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?’ என்று போர்டில் எழுதிப் போட்டு ஒரு நாள் முழுவதும் மாய்ந்து மாய்ந்து கிளாஸ் எடுப்பார்கள். அத்தனை முக்கியமான பாடம் இது.
நாம் அத்தனை விலாவரியாகப் போக வேண்டியதில்லை. சுருக்கமாகப் பார்ப்போம்.
• * எல்லாம் ஒழுங்காக இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. ஒரு வேளை அப்படி இருந்தால் ஏதோ பெரிய பிரச்னை என்று பொருள்.
• * மாற்றங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும்.
• * பழைமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முரண்டுப் பிடித்தால் பின்தங்கிவிடுவீர்கள்.
• * நீங்கள் மாற மறுத்தால், மாறும்படி நிர்ப்பந்திக்கப்படுவீர்கள்.
• * மாற்றங்கள் நிகழும் வரை பொறுமை காக்கவேண்டும்.
• மிக முக்கியமாக:
• மாற்றங்கள் யார் மூலமாக வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். எதிர்பார்க்கவே முடியாது. அது நிகழும்போது உடனடியாகக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
• 1) மாற்றங்கள் வந்தே தீரும்!
• - நமது உடல் மாற்றம் அடைந்து வருகிறது.
• > நமது சிந்தனைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
• > நாம் அணியும் உடை மாறிக்கொண்டிருக்கிறது.
• > நமது நண்பர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
• > சூழ்நிலைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
• > நமது உறவினர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
• > உலகமே மாறிக்கொண்டிருக்கிறது. – இந்தப் பிரபஞ்சமே ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கின்றது.
• 2) மாற்றங்கள் எப்படிப்பட்டவை?
• - எல்லா மாற்றங்களும் நல்லவை என்று சொல்ல முடியாது.
• – எல்லா மாற்றங்களும் கெட்டவை என்றும் சொல்ல முடியாது.
• > ஆனால் நல்லவை, கெட்டவை எதுவுமே நிரந்தரமல்ல என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
• 3) மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மாற வேண்டுமா, வேண்டாமா என்பதை நாமே முடிவு செய்யலாம். மாற்றத்தைத் திட்டமிடலாம்.
• 4) மாறுவதற்கு நாமும் தயாராக இருந்தால் மாற்றங்கள் சுவையாக அமையும்.
• 5) நாம் மாற மறுத்தால், மாற்றங்கள் நம் மீது திணிக்கப்படும்.
0 Comments