UK INFOS
(Abacus, Hindi and Vedic Maths Coaching Centre)
அன்பு மாணவர்களே!
ஒரு புதிய விஷயத்தை கற்கும் முன் அதன் நன்மை மற்றும் தீமை இரண்டையும் ஆராய்ந்து எது சரியோ அதைச் சரியாக சரியான நேரத்தில் கற்று, கற்ற அறிவை சரியான நேரத்தில் பயன்படுத்தும் மனிதனே மிகச்சிறந்த மனிதனாவான்.
அந்த வகையில் நீங்களும் நாம் எதை கற்கிறோம், எப்போது கற்கிறோம், எப்போது பயன்படுத்த போகிறோம் என்பதை அறிந்து செயல்பட்டால் வாழ்க்கையில் எளிதாக முன்னேறலாம்.
கணிதம் என்ற வார்த்தையை கேட்டாலே சில மாணவர்களுக்கு வேப்பங்காய் சாப்பிட்டது போல் கசக்கும்.
சில மாணவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இனிக்கும்.
கணிதம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பது விஷயமல்ல இங்கு.
ஒரு கணக்கை எவ்வளவு வேகமாக எளிதாக நம்மால் கணக்கிட முடியும் என்பதைப் பொறுத்தே மாணவனின் அறிவாற்றல் தீர்மானிக்கப்படுகிறது.
வேத கணிதம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகத்தான் இருக்கும்.
வேத கணிதம் கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
இதோ விரிவாகப் பார்க்கலாம்.
👉இது ஒரு நபருக்கு கணித சிக்கல்களை பல மடங்கு வேகமாக தீர்க்க உதவுகிறது.
👉எளிமையான மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு அறிவார்ந்த முடிவுகளை எடுக்க இது உதவுகிறது.
👉கடினமான கருத்துக்களை மனப்பாடம் செய்வதன் சுமையை குறைக்கிறது.
👉இது ஒரு குழந்தையின் செறிவை அதிகரிக்கிறது மற்றும் அவர்களது திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
👉 கணக்கிடும் நேரத்தை பல மடங்காக குறைக்கின்றது.
👉 இதனால் மாணவர்கள் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் கற்று வருகின்றனர்.
👉குழந்தைகளின் கவனக்குறைவால் அடிக்கடி ஏற்படும் தவறுகளை குறைக்க உதவுகிறது.
👉 வேதக் கணிதம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டித்தேர்வுக்குத் தயாராகும் நாளைய அரசு ஊழியர்களுக்கும் பயன்பெறும்.
👉 கற்றல் என்பதற்கு வயது வரம்பே கிடையாது.
👉 ஆகையால் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருப்போம். வாருங்கள்.
0 Comments