Welcome to UK INFOS
(Abacus, Hindi & Vedic Maths Coaching Centre)
Batch 13 Results - February 2023
ஒரு நொடியின் கதை
(A Seconds Story)
⏰ஒரு நொடி என்பது மிகப் பெரிய விசயம் இல்லைதான்.
⏰ஆனால் ஒரு நொடியை இழந்தாலும் மீண்டும் பெற முடியாது.
⏰காலத்தை பின்னால் திருப்பமுடியாது என்பதுதான், இதன் பொருள்.
⏰ஆனால் அது நம் ஆயுளை அறுக்கும் வாள் அல்லவா?
⏰எந்தக் கருணையும் காட்டாது அடுத்துவரும் 'மாய' நேரம்!
⏰நொடியை இழந்தால் இழந்ததுதான்.
⏰மீட்டுக்கொள்ள மறுவாய்ப்பே இல்லை!
⏰இதை எழுதுவதற்குள் இருபது நொடிகள் தோன்றி மறைந்துவிட்டன!
⏰நாம் வாழும் ஆயுள் 80 ஆண்டுகள் என்றால் மொத்தம் 2 லட்சம் கோடி நொடிகள் ஆகும்.
⏰அதில் மட்டும் 800 லட்சம் நொடிகள் தூங்கிவிடுகின்றோம்!
⏰ஆ' என்று வியக்க வாயைத் திறக்கும்போது 'கொட்டாவி' வருகிறதா? விட்டுத் தள்ளுங்கள்!
⏰இந்தக் கணக்கை நாம் 'கண்டு' கொள்ளவில்லையென்றாலும் தொலைக்காட்சி தொடர் வியாபாரிகளுக்கும், செல்பேசி ஒலியலை இயக்குபவர்களுக்கும் நொடிக்கு நொடி பணத்தை அள்ளித்தருகிறது!
லீப் நொடிகள் (வினாடிகள்)
(Leap seconds)
⏰பூமி, தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறைந்து வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
⏰பூமியின் ஒரு முழுச் சுற்றின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கும்.
⏰ஒருநாள் என்ற கால ஓட்டத்தின் விரைவும், அணுசக்திக் கடிகாரங்கள் காட்டும் கால ஓட்டத்தின் விரைவும் படிப்படியாக வேறுபடும் என்பதையே மேற்சொல்லப்பட்ட உண்மை உணர்த்துகின்றது.
⏰லீப் வருடம் என்பது, எப்படி நான்காண்டுகளுக்கு ஒருமுறை வருகிறதோ அதே போலத்தான் லீப்நொடியும் இழந்த நொடியை நேரத்தை இணைப்பது.
⏰இப்பிரச்னை 'லீப் நொடிகள்' என்று ஒரு நொடி கூட்டிக் கொள்வதன் மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது.
⏰1972-ஆம் ஆண்டு முதல் 22 லீப் நொடிகள் இருந்துள்ளன.
⏰அத்தகைய கடைசி நொடி ஒன்று 2005 டிசம்பர் 31ம் தேதி கூட்டப்பட்டது.
⏰அதனால் 2006 புத்தாண்டு தினத்தில் ஒரு நொடி தாமதமாகக் கொண்டாடப்பட்டது!
Batch 13 Result:
நன்றி.......



0 Comments